ADDED : டிச 25, 2025 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: கம்பம் நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு நல வாரிய அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் வனிதா தலைமை வகித்தார். உத்தமபாளையம் தாசில்தார் கண்ணன் முன்னிலை வகித்தார். கமிஷனர் உமாசங்கர் வரவேற்றார். நல வாரிய தலைவர் ஆறுச்சாமி ஒப்பந்த பணியாளர்களுக்கு நல வாரிய அட்டைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தாட்கோ துணை மேலாளர் ஜான் பால் , நகராட்சி பொறியாளர் அய்யனார், துப்புரவு அலுவலர் அரச குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

