/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மீன்களை காத்திருந்து வாங்கிச்செல்லும் பொதுமக்கள்
/
மீன்களை காத்திருந்து வாங்கிச்செல்லும் பொதுமக்கள்
ADDED : அக் 14, 2024 04:08 AM
ஆண்டிபட்டி, வைகை அணையில் பிடிக்கப்படும் மீன்களுக்கு தேவை அதிகம் இருப்பதால் பொது மக்கள் காத்திருந்து வாங்கிச்செல்கின்றனர்.
வைகை அணை நீர்த்தேக்கத்தில் மீன்வளத் துறை மூலம் வளர்க்கப்படும் மீன்களை பிடித்து விற்பனை செய்ய தனியாருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. வைகை அணை நீர்த் தேக்கத்தில் வளர்க்கப்படும் ஜிலேபி, கட்லா மிருகாள், ரோகு வகை மீன்கள் உடனுக்குடன் பிடிக்கப்பட்டு விற்கப்படுவதால் பொது மக்கள் விரும்பி, வாங்கிச் செல்கின்றனர். கடல் மீன்களை விட வைகை அணை மீன்களில் ருசி அதிகம் என்பதால் இதனை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் பொதுமக்கள் காலை முதலே மீன்கள் வாங்குவதற்காக வைகை அணை நீர்த்தேக்கப் பகுதியில் குவிந்தனர். மீன்கள் வாங்க வந்தவர்கள் டோக்கன் பெற்று, இரண்டு மணி நேரம் காத்திருந்து வாங்கிச்சென்றனர்.