/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி வாரசந்தையில் சகதியால் வழுக்கி விழும் பொதுமக்கள் மழையால் தடுமாறும் வியாபாரிகள்

ADDED : அக் 13, 2024 05:31 AM

தேனி: மழை பெய்ததால் தேனி வாரசந்தை சேறும், சகதியுமாக மாறியதால் இங்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள், வியாபாரிகள் அவதியடைகின்றனர்.
தேனி மேற்கு சந்தை கவுமாரியம்மன் கோயில் வளாகத்தில் வாரசந்தை செயல்படுகிறது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை சந்தை கூடுகிறது. சந்தையில் 150 கடைகள் செயல்படுகிறது. தேனி அதனை சுற்றியுள்ள அரண்மனைப்புதுார், கொடுவிலார்பட்டி, பூதிப்புரம், அல்லிநகரம், ஊஞ்சாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சந்தைக்கு பொதுமக்கள் வருகின்றனர்.
இங்கு காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், காரம், இனிப்பு வகைகள் என விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், கடைகள் மண் தரையில், தார்பாய் கட்டி அமைக்கப்படுகிறது. மழை பெய்தால் நடைபாதைகள் முழுவதும் மழைநீர் தேங்கி சகதியாக மாறிவிடுகிறது. இதனால் நடந்து செல்ல பொதுமக்கள், சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். பெண்கள், முதியோர் தடுமாறி வழுக்கி விழுவது தொடர்கிறது. சிலர் வியாபாரிகள் சகதி தெரியாமல் இருக்க காய்கறி கழிவுகளை சகதியில் கொட்டுகின்றனர். இவை விரைவில் அழுகி சுகாதார கேடு நிலவுகிறது.
மண் தரைகளுக்கு பதிலாக சிமென்ட் தரைஅமைக்க அல்லது, தகர செட்டு கடைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.