/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விளையாட்டு போட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் ஆர்வம்
/
விளையாட்டு போட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் ஆர்வம்
ADDED : செப் 22, 2024 04:09 AM

தேனி: மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்து வரும் முதல்வர் கோப்பை போட்டிகளில் மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் செப்.,10 முதல் நடந்து வருகிறது. பள்ளி, கல்லுாரி, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் போட்டிகள் நிறைவடைந்துள்ளது. நேற்று பொதுமக்கள் ஆண்கள் பிரிவில் போட்டிகள் நடந்தது. போட்டிகளை டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீராங்கனை ரேவதி துவக்கி வைத்தார். சிலம்பம், கால்பந்து, தடகளம், வாலிபால் உள்ளிட்ட போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இன்று பொதுமக்கள் பெண்கள் பிரிவில் போட்டிகள் நடக்கிறது. அரசு ஊழியர்களுக்கான போட்டிகள் நாளை துவங்குகிறது.