/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பாதையை மறித்து கட்டடம் அகற்றக்கோரி மக்கள் மனு
/
பாதையை மறித்து கட்டடம் அகற்றக்கோரி மக்கள் மனு
ADDED : ஜன 02, 2025 07:12 AM

கூடலுார்: பல ஆண்டுகள் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை மறித்து கட்டிய கட்டடத்தை அகற்ற வலியுறுத்தி மக்கள் நகராட்சி அதிகாரியிடம் மனு வழங்கினர்.
கூடலுார் ராஜீவ் காந்தி நகரிலிருந்து சுல்லக்கரை ஓடைக்கு செல்லும் பாதை பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. விளைநிலங்களுக்கு வாகனங்கள் அதிகமாக இவ்வழியாக செல்லும். குடியிருப்புகளில் இருந்து ஓடையை இணைக்கும் ஒரே பாதையும் இதுதான்.
ஓடையை இணைக்கும் பகுதி வரை நகராட்சி சார்பில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பாதையை திடீரென ஆக்கிரமித்து சிலர் கட்டடம் கட்டியுள்ளனர்.
இதனால் விவசாயிகள் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தேனி கலெக்டருக்கு மக்கள் புகார் மனு அனுப்பியுள்ளனர். மேலும் நகராட்சி அதிகாரியிடம் உடனடியாக ஆக்கிரமித்த கட்டடத்தை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மனு வழங்கினர்.

