/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போதிய பஸ்கள் இயக்காததால் வேலைக்கு வருவோர் அவதி பெரியகுளம் பயணிகள் இரவில் தவிப்பு
/
போதிய பஸ்கள் இயக்காததால் வேலைக்கு வருவோர் அவதி பெரியகுளம் பயணிகள் இரவில் தவிப்பு
போதிய பஸ்கள் இயக்காததால் வேலைக்கு வருவோர் அவதி பெரியகுளம் பயணிகள் இரவில் தவிப்பு
போதிய பஸ்கள் இயக்காததால் வேலைக்கு வருவோர் அவதி பெரியகுளம் பயணிகள் இரவில் தவிப்பு
ADDED : செப் 29, 2024 05:42 AM
தேனி : தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து பெரியகுளத்திற்கு இரவு 8:50 மணிக்கு மேல் பஸ்கள் இயக்காததால் தேனியில் வேலை செய்யும்தொழிலாளர்கள் வருவோர் அவதி அடைகின்றனர்.
பெரியகுளம், தேவதானப்பட்டி, லட்சுமிபுரம், வடுகபட்டி அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள், இளைஞர்கள் என பலரும் தேனியில் செயல்படும் ஜவுளி, நகை, பலசரக்கு கடைகள், வணிக நிறுவனங்கள், கம்பெனிகளுக்கு பணிக்கு வருகின்றனர்.
தொழிலாளர்கள் இரவு 9:00 மணிவரை பணி செய்து ஊருக்கு திரும்ப பழைய பஸ் ஸ்டாண்ட் வருகின்றனர்.
ஆனால் தேனி பழைய பஸ் ஸ்டாண்டி இரவு 8:50 மணிக்கு மேல் பெரியகுளத்திற்கு பஸ் வசதி இல்லை.
இதனால் தினமும் தொழிலாளர்கள் ஆட்டோ மூலம் அன்னஞ்சி விலக்கு பகுதிக்கு சென்று தேனி பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் இருந்து வரும் வெளியூர் பஸ்சில் பயணிக்கின்றனர்.
இதனால் கூடுதல் செலவு, நேர விரையம் ஆவதுடன் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
ஆனால் அதே நேரம் இரவு 10:00 மணிக்கு புது பஸ் ஸ்டாண்டில் இருந்து வத்தலகுண்டுவிற்கு இயக்கப்படுகிறது.இந்த பஸ்சில் மிக குறைந்த பயணிகளுடன் செல்கிறது.
இந்த பஸ்சினை தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக இயக்கினால் பெரியகுளம், தேவதானப்பட்டி பகுதிதொழிலாளர்கள் பயன் பெறுவார்கள்.
வரும் நாட்களில் ஆயுத பூஜை, தீபாவளி என பண்டிகைகள் தொடர்ந்து வருவதால் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து இரவு 10:00 மணி வரைபெரியகுளத்திற்கு பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கைஎடுக்க பயணிகள்கோரியுள்ளனர்.