/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
136 அடியை எட்டியது பெரியாறு அணை நீர்மட்டம் - கேரளாவுக்கு எச்சரிக்கை

ADDED : ஜூன் 29, 2025 02:33 AM
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று இரவு 10:00 மணிக்கு 136 அடியை எட்டியதால் கேரளாவுக்கு முதற்கட்ட எச்சரிக்கையை தமிழக நீர்வளத் துறையினர் அனுப்பியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து இந்த அணை நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு 10:00 மணிக்கு நீர்மட்டம் 136 அடியை எட்டியது(மொத்த உயரம் 152 அடி).
ரூல்கர்வ் விதிமுறைப்படி ஜூன் 30 வரை 136 அடி மட்டுமே தேக்க முடியும் என்ற நிலையில் அதற்கு மேல் உயரும் தண்ணீரை கேரளாவிற்கு அணையை ஒட்டியுள்ள ஷட்டர் வழியாக வெளியேற்றப்படும். தற்போது தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 2017 கன அடி திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து 3867 கன அடியாக உள்ளது. இதற்கிடையே முதற்கட்ட எச்சரிக்கையை கேரளாவுக்கு தமிழக நீர்வளத்துறையினர் அனுப்பியுள்ளனர்.