/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வ.உ.சி., சிலை திறக்க அனுமதி மறுப்பு: போலீசாருடன் வாக்குவாதம்
/
வ.உ.சி., சிலை திறக்க அனுமதி மறுப்பு: போலீசாருடன் வாக்குவாதம்
வ.உ.சி., சிலை திறக்க அனுமதி மறுப்பு: போலீசாருடன் வாக்குவாதம்
வ.உ.சி., சிலை திறக்க அனுமதி மறுப்பு: போலீசாருடன் வாக்குவாதம்
ADDED : நவ 20, 2025 04:15 AM
கூடலுார்: கூடலுாரில் வ.உ.சி., வெள்ளாளப் பெருமக்கள் சங்க கட்டடத்தில் நிறுவப்பட்ட வ.உ.சி. சிலையை திறக்க போலீசார் அனுமதி மறுத்ததால் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கூடலுாரில் வ.உ.சி. வெள்ளாளப் பெருமக்கள் சங்க கட்டடம் உள்ளது. இப்பகுதியில் வ.உ.சி. சிலை புதிதாக நிறுவி நேற்று குருபூஜையை முன்னிட்டு சிலை திறப்பு விழா நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக சங்கத்தின் மாநில தலைவர் லட்சுமணன் சிலையை திறந்து வைப்பதற்கான விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இந்நிலையில் சிலை திறப்பதற்கு முறையான அனுமதியை பெறவில்லை எனக் கூறி இன்ஸ்பெக்டர் வனிதாமணி தலைமையிலான போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிர்வாகிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உத்தமபாளையம் டி.எஸ்.பி., பொன்னரசு சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஒரு வாரத்தில் முறையான அனுமதி பெற்ற பின் சிலை திறப்பு விழா நடத்த முடிவு செய்யப் பட்டது.
இதனைத் தொடர்ந்து திறப்பு விழாவிற்காக வந்த மாநிலத் தலைவர் லட்சுமணன் மற்றும் நிர்வாகிகள் திரும்பிச் சென்றனர்.

