ADDED : டிச 06, 2025 09:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பா.ஜ., ஆன்மிகம், ஆலய மேம்பாட்டு பிரிவு தலைவர் ஈஸ்வரன் தலைமையில் நிர்வாகி மலைச்சாமி உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில், ஐயப்ப பக்தர்கள் பலர் தேனி மாவட்டம் வழியாக சென்று வருகின்றனர்.
அவர்களுக்காக வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் பகுதியில் மருத்துவ வசதிகள், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். நெடுஞ்சாலையில் பாலகுருநாதபுரத்தில் ரோட்டோர பால சுற்றுசுவர் சேதத்தை சீரமைக்க வேண்டும் என்றிருந்தது.

