/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
/
அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : டிச 06, 2025 09:53 AM
தேனி: மாநில அரசு சார்பில் சமூக நலத்துறை சார்பில் பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தவர்களுக்கு அவ்வையார் விருது வழங்கப்படுகிறது. விருதுடன் ரூ.1.50 லட்சம் காசோலை, சான்றிதழ் வழங்கப்படும். தமிழகத்தில் பிறந்த, 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தது 5 ஆண்டுகள் மகளிர் மேம்பாடு தொடர்பாக நடவடிக்கைகளில் ஈடுபட்ட பெண்களாக இருக்க வேண்டும்.
தகுதி உடையோர் டிச.,31க்குள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் ஒருபக்க அளவிலான சுயவிவர குறிப்பு, தமிழ், ஆங்கிலத்தில், புகைப்படங்களை, பத்திரிகை செய்திகள் தொகுப்பு, வசிப்பிடத்திற்கு அருகே உள்ள போலீஸ் ஸ்டேஷனில் குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்ற சான்று, இணையத்தில் பதிவு செய்த ஆவணங்களை கையேடாக தயாரித்து கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறை அலுவலகத்தில் 2026 ஜன.,3க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

