ADDED : பிப் 17, 2024 05:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஏத்தகோவில் ஊராட்சி தென்றல் நகர் குமார் தலைமையில் பொதுமக்கள் மனு அளிக்க வந்தனர்.
கலெக்டர் நேர்முக உதவியாளர் சிந்துவிடம் மனு அளித்தனர்.
அவர்கள் மனுவில், எங்கள் பகுதிக்கு போதிய அளவில் குடிநீர் கிடைப்பதில்லை. ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் குடிநீர் வழங்குவதில்லை. குடிநீர் குழாய் பகுதி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.
குடிநீர் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றிருந்தது.