நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம் தேனி நகராட்சி 30வது வார்டு கவுன்சிலர் சந்திரமோகன் மனு அளித்தார். மனுவில், 'சுப்பன்செட்டி தெருவில் வசிக்கும் 600 ரேஷன் கார்டுதாரர்கள் போக்குவரத்து நெரிசலை கடந்து பெரியகுளம் ரோட்டில் சந்தை கேட் எதிரே உள்ள கூட்டுறவு சங்க ரேஷன் கடையில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்குகின்றனர்.
இலவச அரிசியை செலவு செய்து வீட்டிற்கு எடுத்து வரும் நிலை உள்ளது. இந்நிலையில் சுப்பன் தெரு பகுதியில் வாடகை கட்டத்தில் ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுத்தனர். இப்போது காலதாமதம் ஆகிறது. அப்பகுதியில் ரேஷன் கடையை பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றிருந்தது.

