/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பொதுமக்கள் எஸ்.பி., அலுவலகத்தில் மனு
/
பொதுமக்கள் எஸ்.பி., அலுவலகத்தில் மனு
ADDED : பிப் 11, 2024 01:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பெரியகுளம் தாலுகா, தேவதானப்பட்டி அம்பேத்கர் நகர் பறையர் சமுதாய உறவின் முறை பேரவை சார்பில் தலைவர் வெள்ளைச்சாமி தலைமையில் நிர்வாகிகள் நேற்று தேனி எஸ்.பி., அலுவலகத்தில் மனு வழங்கினர்.
மனுவில், 'தேவதானப்பட்டி தெற்குத்தெருவில் போதைப் பொருட்கள் விற்பனை தாராளமாக உள்ளது. புகார் அளித்தாலும் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை.
போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விற்பனையில் ஈடுபடுவோர் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு தாக்குகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க', கோரினர்.