/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் நிவாரணம் கோரி மனு
/
ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் நிவாரணம் கோரி மனு
ADDED : அக் 23, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜ., விவசாய அணி மாநில நிர்வாகி சுந்தர், தமிழக தேசிய விவசாயிகள் சங்க நிர்வாகி சீனிராஜ் வழங்கிய மனுவில், 'மாவட்டத்தில் நீர்வளத்துறை நீரோடைகளில் புதர்களை அகற்றாததால் வயல்களில் வெள்ளநீர் உட்புகுந்தது.
இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி பாதித்துள்ளது. வைக்கோலும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வெள்ளம் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்,'' என கோரினர்.