ADDED : மார் 27, 2025 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்ட சர்வோதய மண்டல் அமைப்பு செயலாளர் செல்வக்குமார், உதவித்தலைவர் மனோகரன் உள்ளிட்டோர் கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம் மனு அளித்தனர்.
மனுவில், 'மாகாத்மா காந்தி 1933-34ம் ஆண்டுகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தேனி மாவட்டத்தில் தேவாரம், கம்பம் பகுதி பொதுக்கூட்டத்தில் பேசினார். தேனி வழியாக கடந்து சென்றார். தேனி நகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே அல்லது வேறு இடத்தில் காந்தி சிலை அமைக்க இடம் தேர்வு செய்து தர வேண்டும்,' என கோரினர். ஹிந்து எழுச்சி முன்னணி நகர அமைப்பாளர் கனகுபாண்டி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில், தேனி தீயணைப்பு நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திடவும்,. பழுதடைந்த உபகரணங்களை சீரமைத்திடவும், வீரர்களுக்கு வசதிகள் செய்து தர கோரினர்.