/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடிமெட்டில் இ-சேவை மையம் அமைக்க மனு
/
போடிமெட்டில் இ-சேவை மையம் அமைக்க மனு
ADDED : நவ 14, 2024 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி ; போடிமெட்டில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, சப் கலெக்டர் சாந்தி, ஆர்.டி.ஓ., தாட்சாயினி, நில அளவை உதவி இயக்குனர் அப்பாஸ், மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி தலைவர் கண்ணன் காளி ராமசாமி முன்னிலை வகித்தனர்.
முகாமில் பட்டா மாறுதல், பட்டா பெறுதல், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை வழங்குதல், மகப்பேறு பெட்டகம், வேளாண் பண்ணை கருவிகள், முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை உட்பட 89 நபர்களுக்கு ரூ.ஒரு கோடியே 30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
போடிமெட்டில் இ - சேவை மையம் அமைக்க கோரி மனு வழங்கினர்.

