/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விளையாட்டு வீராங்கனை கலெக்டரிடம் மனு
/
விளையாட்டு வீராங்கனை கலெக்டரிடம் மனு
ADDED : ஜன 25, 2024 06:04 AM
தேனி: தேனி அரண்மனைப்புதுார் முல்லை நகர் பரமராஜ் மகள் பிரியங்கா. இவர் கலெக்டர் ஷஜீவனாவிடம் வழங்கிய மனுவில், மாற்றுத்திறனாளிகளுக்கான காது கேளாதோர் வாய் பேச இயலாததோருக்கான உலகளவிலான விளையாட்டுப் போட்டி பிரேசிலில் நடந்தது.
இதில் பங்கேற்க எனக்கு மத்திய அரசின் நிதியில்லை என்றும் அழைத்து செல்ல முடியாது என அகில இந்திய காது கேளாதோர் சங்கம் சார்பில் நிராகரிக்கப்பட்டேன். ஆனால், மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியால் எங்களது பிரேசில் விளையாட்டுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.25 லட்சம் (ஏ.ஐ.எஸ்.சி.டி.ஏ) விளையாட்டு சங்கம் பெற்று கொண்டு என்னையும், என்னுடன் உள்ள 5 விளையாட்டு வீராங்கனைகளையும் ஏமாற்றியுள்ளது. மேலும் எங்கள் ஐந்து பேரையும் டில்லியில் இருந்து பசியுடன் விமானத்தில் பயணிக்க செய்து ஏமாற்றிவிட்டனர். இதனால் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து, எங்களது கனவை நனவாக்க வேண்டும் என கோரினர்.