/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
திண்டுக்கல் -- குமுளி ரயில் திட்டம் நிறைவேற்ற கலெக்டரிடம் மனு
/
திண்டுக்கல் -- குமுளி ரயில் திட்டம் நிறைவேற்ற கலெக்டரிடம் மனு
திண்டுக்கல் -- குமுளி ரயில் திட்டம் நிறைவேற்ற கலெக்டரிடம் மனு
திண்டுக்கல் -- குமுளி ரயில் திட்டம் நிறைவேற்ற கலெக்டரிடம் மனு
ADDED : மார் 25, 2025 05:01 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் - குமுளி ரயில் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தேனி போராட்ட குழுவினர் நடைபயணமாக வந்து திண்டுக்கல் கலெக்டர் சரவணனிடம் மனு அளித்தனர்.
திண்டுக்கல் - குமுளி இடையே அகல ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என தேனி மாவட்டத்தை சேர்ந்த வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலதரப்பை சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுவரை திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
இத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திண்டுக்கல் - குமுளி அகல ரயில் பாதை திட்ட போராட்டக் குழு தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் 50க்கு மேற்பட்டோர் தேனி பங்களா மேட்டில் இருந்து திண்டுக்கல்லுக்கு நடைபயணமாக வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.