/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' ஆண்டிபட்டியில் குவிந்த மனுக்கள்
/
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' ஆண்டிபட்டியில் குவிந்த மனுக்கள்
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' ஆண்டிபட்டியில் குவிந்த மனுக்கள்
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' ஆண்டிபட்டியில் குவிந்த மனுக்கள்
ADDED : பிப் 01, 2024 04:21 AM

ஆண்டிபட்டி : தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த 'உங்களைத் தேடி உங்கள் ஊரில் ' என்ற புதிய திட்டம் மூலம் தேனி கலெக்டர் ஷஜீவனா ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் மக்களிடம் மனுக்கள் பெற்றார்.
ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் நேற்று அனைத்து துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதன் பின் பல துறை அதிகாரிகள் கொண்ட தனித்தனி குழுக்கள் ஆண்டிபட்டி தாலுகாவின் பல்வேறு இடங்களில் செயல்படுத்தப்படும் அரசின் வளர்ச்சி திட்டங்கள், அரசு மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். கலெக்டர் ஷஜீவனா ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் குறித்த விபரங்களை கேட்டறிந்தார். உள் நோயாளிகளுக்கான வார்டுகளில் வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை முன்புறம் சுத்தம் செய்யாத வடிகாலில் கழிவுநீர் பொங்கி சுகாதாரக் கேடு ஏற்படுத்தும் விதமாக இருந்தது.
இதனை உடனே சரி செய்யவும் கழிவுநீர் வடிகாலுக்கு மேல் மூடி அமைக்கவும் உத்தரவிட்டார். அவசர கதியில் வடிகால் அரை குறையாக சுத்தம் செய்யப்பட்டது.
பேரூராட்சி அதிகாரிகள், தொழில்நுட்ப உதவியாளர்கள் ஆலோசனை இன்றி சுகாதார பணியாளர்கள் கடப்பா கற்களால் கழிவுநீர் கால்வாய்க்கு மேல் மூடி அமைத்தனர். சேதம் அடைந்த கழிவுநீர் வடிகாலில் சீரமைப்பு பணி செய்யாமல் மேல் மூடி அமைக்கப்பட்டது. இப் பணி பெயரளவில் நடந்துள்ளதாக பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மாலை 4.30 மணிக்கு ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களிடம் கலெக்டர் மனுக்கள் பெற்றார். முதியோர் உதவி தொகை, மகளிர் உரிமைத்தொகை, பட்டா மாறுதல், புதிய ரேஷன் கார்டு உட்பட அரசின் நலத்திட்டங்களில் தங்களுக்கு தீர்வு வேண்டி மனுக்களை கொடுத்தனர். பெறப்பட்ட மனுக்கள் அந்தந்த துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளிடம் தீர்வுக்காக ஒப்படைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.