/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு மருத்துவமனையில் மருந்தாளுனர் பணியிடம் காலி கம்பத்தில் நோயாளிகள் அவதி

ADDED : செப் 21, 2024 06:14 AM
கம்பம்: கம்பம் அரசு மருத்துவமனையில் தலைமை மருந்தாளுனர் பணியிடம் காலியாக உள்ளதால் மருந்து மாத்திரைகள் பெற நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
கம்பம் அரசு மருத்துவமனையில் 176 படுக்கை வசதி உள்ளது. தினமும் வெளி நோயாளிகள் 800 முதல் 1200 பேர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதுதவிர வாரத்தில் ஒருநாள் சர்க்கரை, பிரஷர் நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இம் மருத்துவமனையில் தலைமை மருந்தாளுனர், 3மருந்தாளுனர் பணியிடங்களுக்கு அனுமதி உள்ளது. இதில் தலைமை மருந்தாளுனர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு பதில் வேறு அலுவலர் நியமனம் செய்யவில்லை . தற்போது இருவர் மட்டுமே பணியில் உள்ளனர். இருவர் சமாளிப்பது சிரமமானது. அதில் ஒருவர் விடுமுறை எடுத்தாலும் சிக்கல் ஏற்படுகிறது. எனவே தலைமை மருந்தாளுனர் பணியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருந்தாளுனர் கூறுகையில் , மாவட்டத்தில் 5 மருத்துவமனைகளிலும் தலைமை மருந்தாளுனர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் பணிகள் பாதித்துள்ளது. விரைவில் தலைமை மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.