நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, இந்திய மருத்துவ ஹோமியேபதி துறை (ஆயுஷ்) சார்பில் மருத்துவ விழிப்புணர்வு முகாம், புகைப்பட கண்காட்சி நடந்தது.
முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜே.நடராஜன், தேனி அமர்வு நீதிபதி அனுராதா வரவேற்றார். சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் அன்னகாமு, ஆயுஷ் மருத்துவ அலுவலர் டாக்டர் முத்தமிழ்செல்வி ஆகியோர் முகாமில் பரிசோதனைகளை மேற்கொண்டு, விபரங்களை எடுத்துரைத்தனர். எஸ்.பி., சினேகாபிரியா, டி.ஆர்.ஓ., ராஜகுமார், நீதிமன்ற அலுவலர்கள் பங்கேற்றனர். பள்ளி மாணவ, மாணவிகள் புகைப்பட கண்காட்சியை கண்டு பயனடைந்தனர்.

