/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பாலம் கட்டும் பணியில் குழாய் சேதம்
/
பாலம் கட்டும் பணியில் குழாய் சேதம்
ADDED : பிப் 08, 2025 05:45 AM
ஆண்டிபட்டி: பாலம் கட்டும் பணியில் சேதமான குடிநீர் குழாயை சீரமைக்காததால் 3 கிராமங்களில் குடிநீர் வினியோகம் பாதித்துள்ளது.
ஆண்டிபட்டி ஒன்றியம், டி. சுப்புலாபுரம் பெரிய ஓடையின் குறுக்கே நபார்டு வங்கி திட்டத்தில் ரூ.2.61 கோடி மதிப்பில் கடந்த ஆண்டு புதிய பாலம் கட்டப்பட்டது. பாலம் கட்டுமான பணியின் போது அப்பகுதி வழியாகச் சென்ற குடிநீர் குழாய், சுடுகாட்டில் நீர் தேவைக்கான குழாய் இணைப்புகள் சேதமடைந்தன. தற்போது கட்டுமான பணிகள் முடிந்து பாலம் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டும் சேதமான குடிநீர் குழாய் சரி செய்யப்படவில்லை.
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: டி.சுப்புலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட புதூர், அணைக்கரைப்பட்டி, பெருமாள்பட்டி கிராமங்களுக்கு செல்லும் குழாய் இணைப்புகளில் 80 மீட்டர் நீளத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது.
15 வது நிதிக்குழு மானியம் ரூ.4.30 லட்சம் செலவில் அப்பகுதி சுடுகாட்டிற்கு போர்வெல் மற்றும் பைப்லைன் அமைத்து தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. தொட்டிக்கு செல்லும் குழாய் சேதமானதால் சுடுகாட்டில் தண்ணீர் விநியோகம் பாதித்துள்ளது. பாலம் கட்டுமான பணியில் சேதமான குழாய்களை சீரமைக்க கூடுதல் செலவாகும். அதற்கான நிதி ஊராட்சியில் இல்லை. குழாய் சேதம் குறித்து உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரமைப்புக்கான நடவடிக்கை இன்னும் இல்லை என்றனர்.