/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முந்தல்- போடிமெட்டு ரோடு அகலப்படுத்த திட்டம் தயார்
/
முந்தல்- போடிமெட்டு ரோடு அகலப்படுத்த திட்டம் தயார்
முந்தல்- போடிமெட்டு ரோடு அகலப்படுத்த திட்டம் தயார்
முந்தல்- போடிமெட்டு ரோடு அகலப்படுத்த திட்டம் தயார்
ADDED : ஜன 18, 2024 06:14 AM
தேனி : போடி முந்தல் முதல் போடி மெட்டு வரை உள்ள 20 கி.மீ., ரோடு அகலப்படுத்தவதற்கான பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கேரள மாநிலம் மூணாறுவிற்கு சுற்றுலா செல்ல தமிழகம், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தேனி மாவட்டம் போடி வழியாக செல்கின்றனர். இந்த ரோடு தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பராமரிப்பில் உள்ளது. போடி மெட்டு முதல் மூணாறு வரை ரோடு 10 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகப்பகுதியான போடிமெட்டு முதல் முந்தல் வரை ரோடு 7 மீ., அகலம் மட்டும் உள்ளது. இந்த ரோட்டை 10 மீ., அகலமாக மாற்ற நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும் ரோட்டை அகலபடுத்த திட்ட அறிக்கை தயார் செய்ய அனுமதி கோரி மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளனர். ரோடு அகலப்படுத்தப்பட்டால் போக்குவரத்திற்கு எளிதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.