ADDED : பிப் 19, 2024 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் ரூ.2 கோடி செலவில் அறிவுசார் மையம் அமைக்கும் பணி பெருமளவு முடிந்துள்ளது.
மாவட்ட நுாலகத்துறை மூலம் 2,500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வாங்கப்பட்டு உள்ளன. இந்த அறிவுசார் மையம், தேவாரத்தில் ரூ.2 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. விரைவில் அறிவுசார் மையம், பஸ் ஸ்டாண்ட் ஆகியவை முதல்வர் திறந்து வைப்பதற்கான பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

