/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிப்காட் பூங்கா வளாகத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா
/
சிப்காட் பூங்கா வளாகத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா
சிப்காட் பூங்கா வளாகத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா
சிப்காட் பூங்கா வளாகத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா
ADDED : டிச 22, 2024 09:20 AM

தேனி : தேனி தப்புக்குண்டு ரோட்டில் மாவட்ட 'சிப்காட்' தொழில் பூங்கா உள்ளது. இங்கு மாவட்ட வனத்துறையுடன் இணைந்து, வளாகத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஒரு பகுதியாக 1000 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
சிப்காட் திட்ட மேலாளர் சித்திரைவேல், மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் செசில்கில்பர்ட் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தனர்.
தேனி ரேஞ்சர் சிவராம், தப்புக்குண்டு ஐ.டி.ஐ., மாணவர்கள், சிப்காட், வனத்துறை ஊழியர்கள் பங்கேற்றனர். சிப்காட் வளாகத்தில் உள்ள 3.5 ஏக்கரில் முறையான இடைவெளியில் முதற்கட்டமாக நீர்மருது, புங்கை, பாதாம், அத்தி, ஆழம், வேம்பு உள்ளிட்ட 8 வகையான 700 மரக்கன்றுகள் நடப்பட்டன. மீதியுள்ள 300 மரக்கன்றுகள் நடும் பணிகள் 2 நாட்களில் நிறைவு பெறும் என, சிப்காட் திட்ட அலுவலர் தெரிவித்தார்.