ADDED : ஜூலை 09, 2025 07:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி மாவட்டத்தில் (நாளை ஜூலை ௧0) சட்டசபை உறுதிமொழிக்குழு தலைவர் எம்.எல்.ஏ., வேல்முருகன் தலைமையில் 12 குழு உறுப்பினர்கள், சட்டமன்ற பேரவை செயலக அலுவலர்கள் ஆய்வு செய்கின்றனர்.
ஆய்வில் மருத்துவமனைகள், பள்ளிகள், வேளாண், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை என அனைத்து அரசுத்துறை திட்டங்கள், வளர்ச்சிப்பணிகள் பற்றி ஆய்வு செய்கின்றனர். தொடர்ந்து மதியம் 2:30 மணிக்கு மேல் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கின்றனர் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

