ADDED : டிச 25, 2024 07:28 AM

தேனி : தேனி வடக்கு மாவட்ட பா.ம.க., சார்பில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கிட வலியுறுத்திகண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டச் செயலாளர் அரசுபாண்டி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் தெய்வேந்திரன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் கந்தன், சரவணக்குமார், தேனி நகரத் தலைவர் முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை, மண்டல அமைப்புச் செயலாளர் முருகானந்தம், தேனி நகர செயலாளர் காஜாமைதீன், மாநில செயற்குழு உறுப்பினர் சேட், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் சந்திரன் ஆகியோர் பேசினர். நகர தொண்டர் அணி செயலாளர் புலிராமன் நன்றி தெரிவித்தார்.
பெரியகுளம்: பா.ம.க., சார்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்கரை முத்துராஜா தெருவில் இருந்து பொதுமக்கள் ஊர்வலம் துவங்கியது. நகர செயலாளர் முத்தையா தலைமை வகித்தார்.
கவுன்சிலர் குமரன் முன்னிலை வகித்தார். நகர தலைவர் தினகரன் உட்பட நிர்வாகிகள், வன்னியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். மூன்றாந்தல் பகுதியில் ஊர்வலம் நிறைவடைந்து. கோரிக்கையை நிறைவேற்றிட தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

