/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ
/
சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ
ADDED : ஏப் 09, 2025 07:20 AM
பெரியகுளம் : பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 9 ம் வகுப்பு படித்த 15 வயது சிறுமி. இவரை பட்டாளம்மன் கோயில் தெரு கார்த்திக்ராஜா 24. அவரது தாயார் பேச்சியம்மாள் 52. சிறுமியின் தந்தை முருகன் 50. தாயார் சரஸ்வதி 40 ஆகியோர் சேர்ந்து சில மாதங்களுக்கு முன் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தனர். சிறுமி கர்ப்பமானார். வீட்டு வேலை செய்யவில்லை என கார்த்திக்ராஜா சண்டையிட்டார்.
இதனால் சிறுமி கோபித்துக்கொண்டு விஷம் குடித்தார். கர்ப்பம் கலைந்தது. தேனி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். புகாரில் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் கார்த்திக் ராஜா மீது போக்சோ வழக்கும், சிறுமி திருமணத்திற்கு உடந்தையாக இருந்த பேச்சியம்மாள், முருகன், சரஸ்வதி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.