/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கல்லுாரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரைப்போட்டி
/
கல்லுாரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரைப்போட்டி
ADDED : ஜன 15, 2024 03:59 AM
தேனி : மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், கல்லுாரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகள் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கவிதைப் போட்டியில் தேனி கலை அறிவியல் கல்லுாரி வணிகவியல் மாணவர் அரியகாமுத்துரை முதல் பரிசு பெற்றார். பெரியகுளம் ஜெயராஜ் அன்னப்பாக்கியம் மகளிர் கல்லுாரி தமிழ்த்துறை மாணவி ரிமா 2ம் பரிசு பெற்றார். கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரி தமிழ்த்துறை மாணவி தருணா 3ம் பரிசும் பெற்றனர்.
கட்டுரைப் போட்டியில் தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரி வரலாற்றுத்துறை மாணவி பொதிகைமலர் முதல் பரிசு பெற்றார். பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லுாரி தமிழ்த்துறை மாணவி கனிமொழி 2ம் பரிசு பெற்றார்.
கோட்டூர் அரசு கலை அறிவியல் கல்லுாரி ஆங்கிலத்துறை மாணவன் ரியாஸ்குமார் 3ம் பரிசு பெற்றார். பேச்சுப் போட்டியில் தேனி அரசு சட்டக்கல்லுாரி மாணவி சரண்யா முதல் பரிசும், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லுாரியில் இயற்பியல்துறை மாணவி சிந்துஜா 2ம் பரிசும் பெற்றனர். ஆண்டிபட்டி அரசு கலை அறிவியல் கல்லுாரி பொருளாதாரத்துறை மாணவி சுருதி மூன்றாம் பரிசு பெற்றார். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2 ம் பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் மாவட்ட கலெக்டர் சார்பில் விரைவில் வழங்கப்படும் என, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோ தெரிவித்தார். நிகழ்வில் தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.