/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'சென்சிட்டிவ்' ஓட்டுச்சாவடிகள் கண்டறிய போலீசார் தீவிரம்
/
'சென்சிட்டிவ்' ஓட்டுச்சாவடிகள் கண்டறிய போலீசார் தீவிரம்
'சென்சிட்டிவ்' ஓட்டுச்சாவடிகள் கண்டறிய போலீசார் தீவிரம்
'சென்சிட்டிவ்' ஓட்டுச்சாவடிகள் கண்டறிய போலீசார் தீவிரம்
ADDED : மார் 03, 2024 12:05 AM
கம்பம்: சென்சிட்டிவ் மற்றும் ஹைபர் சென்சிட்டிவ் ஓட்டுச் சாவடிகளை கண்டறியும் பணியில் போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
லோக்சபா தேர்தல் தேதி எந்த நேரமும் அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தேர்தலையொட்டி மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பணியிடத்தில் பணியாற்றும் அதிகாரிகள், போலீசார் மாற்றம் நடைபெற்று வருகிறது. தேர்தல் பணிக்காக பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
போலீஸ் சார்பில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள மொத்த ஒட்டு சாவடிகள், பதட்டம் நிறைந்தது, அதிக பதட்டம் நிறைந்தது என ஓட்டு சாவடிகள் பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.
கடந்த தேர்தலில் தயாரித்த பட்டியலை வைத்து சரிபார்க்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. அந்த பட்டியலில் புதிதாக சேர்க்க வேண்டிய ஓட்டுச்சாவடிகள் உள்ளதா என்றும் கள ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கள ஆய்வில் எஸ்.பி. தனிப் பிரிவு, எஸ்.பி. சி.ஐ.டி., பிரிவை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

