/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓய்வூதிய தொகையை முறைகேடாக பெற்று ரூ.27.75 லட்சம் மோசடி: வாரிசுதாரர்கள் 11 பேர் மீது போலீசில் புகார்

ADDED : ஜன 07, 2025 05:27 AM
தேனி: ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் இறந்த பின்னும் அவர்களது வாரிசுதாரர்கள் முறைகேடாக ஓய்வூதியம் பெற்று ரூ.27.75 லட்சம் மோசடி செய்ததால் அந்த நிதியை திரும்ப பெறும் நடவடிக்கையினை கருவூத்துறை மேற்கொண்டுள்ளது.
ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு அவர் இறக்கும் வரை ஓய்வூதியமும், அவருக்கு பின் அவரது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஒய்வூதியம் பெறும் அரசு ஊழியர் குடும்பத்தில் கணவர் அல்லது மனைவி என ஒருவரும் இல்லாத பட்சத்தில் அவர்களின் மகன் அல்லது மகளுக்கு 25 வயது வரை அல்லது வருவாய் ஈட்டும் வரையும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் இறந்தால் சம்ந்தப்பட்ட குடும்பத்தினர் உடனே கருவூத்துறைக்கு இறப்பு சான்றிதழுதடன் தகவல் அளிக்க வேண்டும். சிலர் இதனை தெரிவிக்காமல் தொடர்ந்து ஓய்வூதிய தொகையினை பெற்று அனுபவிக்கின்றனர். இதுபோன்று மாவட்டத்தில் ஓய்வுபெற்றவர்களின் குடும்பத்தை சேர்ந்த் 8 பெண்கள், 3ஆண்கள் என 11 பேர் ரூ.27.75 லட்சம் முறைகேடாக பெற்றது தெரிந்தது. இதனையறிந்த கருவூலத்துறை 11 பேர் மீது, கலெக்டர் ஷஜீவனா பரிந்துரையில் எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
கருவூலத்துறையினர் கூறுகையில், ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப மேலாண்மை திட்ட விபரங்களின் படி முறைகேடுகண்டறிந்தோம். 11 பேர் மீது போலீசில் புகார் அளித்து நிதியினை திரும்ப பெறும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.' என்றார்.