/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வியாபாரி கொலையில் சிப்ஸ் கடை உரிமையாளர், மகன் கைது அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் முடிவு
/
வியாபாரி கொலையில் சிப்ஸ் கடை உரிமையாளர், மகன் கைது அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் முடிவு
வியாபாரி கொலையில் சிப்ஸ் கடை உரிமையாளர், மகன் கைது அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் முடிவு
வியாபாரி கொலையில் சிப்ஸ் கடை உரிமையாளர், மகன் கைது அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் முடிவு
ADDED : ஜூலை 09, 2025 07:31 AM
தேனி : குறைந்த விலைக்கு தங்க நகைகள் தருவதாக கூறிய பெங்களூரூ வியாபாரி திலீப்பை, போலி நகைகள் கொடுத்து ஏமாற்றுபவர் எனக்கருதி காரில்கடத்தி கொலை செய்து புதைத்து தலைமறைவாகிய சிப்ஸ் கடை உரிமையாளர்ஜெயக்குமார், அவரது மகன் சஞ்சயை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களுக்கான அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கர்நாடகா பெங்களூரு மடுவாலா பகுதி திலீப் 40. உறவினர் கலுவாவுடன் தேனி, ஆண்டிபட்டியில் கண்ணாடி வியாபாரம் செய்தனர். அங்குள்ள சிப்ஸ் கடையில் பொருட்கள் வாங்கிய போதுபணம் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் ஊழியர் மோகனிடம், தங்க நகைகள்தருகிறோம். அதற்கு பணம் கொடுங்கள்' என தெரிவித்தனர்.
மோகன் இந்த விபரங்களை, கடை உரிமையாளர்கள் ஜெயக்குமார், அவரது மகன் சஞ்சய்யிடம் அலைபேசியில் தெரிவித்தார். திலீப் பயன்படுத்திய அலைபேசி எண், ஏற்கனவே ஜெயக்குமார், சஞ்சய்யிடம் இரு ஆண்டுகளுக்கு முன்போலி நகைகள் கொடுத்து ஏமாற்றிய நபரின் அலைபேசி எண் என்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
மோகனிடம் இருவரையும் தேனி புது பஸ் ஸ்டாண்ட் அழைத்துவரும்படி கூறினர். மோகன் அலைபேசியில் அழைக்க ஏப்.15ல் புது பஸ் ஸ்டாண்ட் வந்த தீலிப் உள்ளிட்ட இருவரையும் டூவீலரில் கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள கட்சி பிரமுகர் ஒருவரின் தென்னந்தோப்பிற்கு மோகன் அழைத்துச் சென்றார்.
அங்கு இருவரையும் தாக்கிய ஒரு கும்பல் அங்கிருந்து ஜல்லிபட்டி முருகன்தோட்டத்திற்கு காரில் கடத்திச் சென்றது. அங்கு இருவரையும் மரத்தில் கட்டி வைத்து தாக்கியதில் திலீப் உயிரிழந்தார். மயக்கமடைந்த கலுவாவிற்கு இந்த விபரம் தெரியாது.
கலுவாவை ஜல்லிப்பட்டி பெரியகுளம் பைபாஸ் பகுதியில் இறக்கிவிட்டனர்.
பின் ஜல்லிபட்டி ஊராட்சியில் உள்ள குறவன்குளம் வாய்க்கால் கரையில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் குழிதோண்டி திலீப் உடலை புதைத்தனர்.
தப்பித்து கர்நாடகா சென்ற கலுவா, தனது சகோதரி நிர்மலாவிடம் தகவல் அளித்தார். அவர் தாயுடன் தேனி போலீசில் புகார் அளித்தார். தனிப்படைஅமைத்து இச்சம்பவத்தில் இதுவரை 11 பேர் கைது செய்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பதுங்கி இருந்த சிப்ஸ் கடை உரிமையாளர் ஜெயக்குமார், அவரது மகன் சஞ்சய் இருவரையும் இன்ஸ்பெக்டர் ஜவஹர் தலைமையிலான போலீசார் ஜூலை 6ல் கைது செய்தனர்.
குற்றம் செய்தவர்களை கண்டறியும் அடையாள அணிவகுப்பு நடத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.