/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உதவிப் பொறியாளர் வேலை ரூ.20 லட்சம் மோசடி நால்வர் மீது போலீசார் வழக்கு
/
உதவிப் பொறியாளர் வேலை ரூ.20 லட்சம் மோசடி நால்வர் மீது போலீசார் வழக்கு
உதவிப் பொறியாளர் வேலை ரூ.20 லட்சம் மோசடி நால்வர் மீது போலீசார் வழக்கு
உதவிப் பொறியாளர் வேலை ரூ.20 லட்சம் மோசடி நால்வர் மீது போலீசார் வழக்கு
ADDED : ஏப் 24, 2025 03:08 AM
தேனி:'வங்கி ஓய்வு ஊழியரின் மகனுக்கு நெய்வேலி அனல் மின் நிலையத்தில் உதவிப் பொறியாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.20 லட்சம் மோசடி செய்த ராஜபாளையம் சமுசிகாபுரத்தை சேர்ந்த பழனிச்சாமி, அவரது மனைவி பொன்அமிர்தம், மகன்கள் உட்பட நால்வர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கம்பம் காந்திநகர் கிளப் தெரு வெங்கடாஜலபதி. கனரா வங்கியின் ஒய்வு பெற்ற ஊழியர். இவரது மகன் நவநீதகிருஷ்ணன் பி.இ., முடித்து அரசு வேலைக்கு முயற்சித்தார். வெங்கடாஜலபதிக்கு விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், சமுசிகாபுரத்தை சேர்ந்த பழனிச்சாமியின் அறிமுகம் கிடைத்தது. 2021 ஜூன் 1ல், வெங்கடாஜலபதி வீட்டிற்கு பழனிச்சாமி, மனைவி பொன்அமிர்தம், மகன்கள் கனகவேல்ராஜன், அதிபன்கார்த்திக்ராஜன் ஆகியோர் வந்தனர்.
இவர்கள் ‛எங்களது மகன்கள் இருவரையும் நெய்வேலி அனல்மின் நிலையத்தில் உதவிப் பொறியாளர் பணிக்கு ரூ.30 லட்சம் வழங்கி பணியில் சேர்த்தோம்', என ஆசை வார்த்தை கூறினர். இதனை நம்பிய வெங்கடாஜலபதி 2021 ஜூலை 2 முதல் 2021 ஆக 26 வரை பழனிச்சாமியின் வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சமும், ரொக்கமாக ரூ.15 லட்சமும் என ரூ.20 லட்சம் வழங்கினார். ஆனால் வேலை வாங்கித் தராமல் மோசடி செய்தனர். வெங்கடாஜலபதி தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவில் இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி, எஸ்.ஐ., யாழிசைசெல்வன் ஆகியோர் பழனிச்சாமி உட்பட நால்வர் மீது மோசடி வழக்குப்பதிந்துள்ளனர்.