/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெண்ணை தாக்கியவர் மீது போலீஸ் வழக்கு
/
பெண்ணை தாக்கியவர் மீது போலீஸ் வழக்கு
ADDED : ஏப் 05, 2025 05:30 AM
தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம் சில்வார்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த தங்கமலை மனைவி பாக்கியம் 55.
இவரது வீட்டின் முன் இருந்த குடிநீர் வாளி உட்பட அந்த தெருவில் வாளிகளை, இதே ஊர் ஆசாரிதெருவைச் சேர்ந்த நவீன்குமார் 30. டூவீலரில் செல்லும்போது வாளிகளை காலால் தள்ளிவிட்டு சென்று வந்துள்ளார்.
இது குறித்து பாக்கியம், நவீன்குமார் பெற்றோர்களிடம் கூறியும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் இதே தவறினை செய்த நவீன்குமாரிடம், பாக்கியம் ஏன் இப்படி செய்கிறாய் என கேட்டுள்ளார். பாக்கியத்தை கல்லால் நவீன்குமார் அடித்துகாயப்படுத்தினார். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பாக்கியம் அனுமதிக்கப்பட்டார். தேவதானப்பட்டி போலீசார் நவீன்குமாரை தேடி வருகின்றனர்.