/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நண்பரை கத்தியால் குத்திய மூவர் மீது போலீஸ் வழக்கு
/
நண்பரை கத்தியால் குத்திய மூவர் மீது போலீஸ் வழக்கு
ADDED : செப் 20, 2025 04:37 AM
உத்தமபாளையம்: உத்தமபாளையம் பாறை மேட்டு தெருவை சேர்ந்த சத்தியசீலன் 25, சரவணன் 26, ராஜ்குமார் 24, பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் முகமது மீரான் 26, இவர்கள் நால்வரும் நண்பர்கள். 2022ல் உத்தமபாளையத்தில் சிறுவன் கொலை செய்து கிணற்றில் வீசப்பட்டான். அந்த வழக்கில் முகமது மீரான் உள்ளார்.
நேற்று முன்தினம் இவர்கள் நால்வரும் க.புதுப்பட்டியில் மது அருந்தியுள்ளனர். இறந்த சிறுவன் சத்தியசீலனுக்கு உறவினர் என்பதால், முகமது மீரானுடன் சிறுவன் கொலை குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. மூன்று பேர்களும் முகமது மீரானுடன் தகராறு செய்துள்ளனர். அப்போது கத்தியால் முகமது மீரானின் கழுத்தில் குத்தினர். அங்கிருத்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் முகமது மீரான் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அங்கிருந்து தேனி மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டுள்ளார். உத்தமபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.