/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரகளை செய்த சுற்றுலா பயணிகள் போலீசார் தலையீட்டால் மோதல் தவிர்ப்பு
/
ரகளை செய்த சுற்றுலா பயணிகள் போலீசார் தலையீட்டால் மோதல் தவிர்ப்பு
ரகளை செய்த சுற்றுலா பயணிகள் போலீசார் தலையீட்டால் மோதல் தவிர்ப்பு
ரகளை செய்த சுற்றுலா பயணிகள் போலீசார் தலையீட்டால் மோதல் தவிர்ப்பு
ADDED : ஜூலை 09, 2025 07:30 AM

மூணாறு :  மூணாறில் சுற்றுலா பயணிகள் போதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவத்தில்  போலீசார்  தலையிட்டதால் மோதல் தவிர்க்கப்பட்டது.
கேரளா, திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் 20க்கும் மேற்பட்டோர் நேற்று மறையூர், காந்தலூர்  பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் உடுமலையில் இருந்து மூணாறுக்கு வந்த கேரள அரசு பஸ்சில் மறையூரில் ஏறினர். அக்குழுவில் பலர் கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்தியதாக கருதப்படுகிறது. அதனால் போதையில் பஸ்சில்  ரகளையில் ஈடுபட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். இச்சம்பவம் மூணாறு நகரில் சிலருக்கு தெரியவந்தது.
மூணாறுக்கு  நேற்று மாலை 4:00 மணிக்கு பஸ் வந்ததும் அதில் இருந்து இறங்கிய போதை ஆசாமிகளிடம் பஸ்சில் நடந்த சம்பவம் குறித்து கேட்டனர்.
அவர்களை போதை ஆசாமிகள் தாக்க முயன்றதால், இரு தரப்பினரும் பலமாக தாக்கி கொண்டனர். பின்னர் நகரின் மையப்பகுதிக்கு வந்த போதை ஆசாமிகள் நடந்து சென்ற  சிலரை தாக்க  முயன்றதுடன் ரகளையில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த போலீசார் போதை ஆசாமிகளை சமாதானபடுத்தி சம்பவம் குறித்து புகார் அளிக்க விரும்பினால் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதனை ஏற்க மறுத்தவர்கள்  போலீசாரின் முன்பு பொதுமக்களை ஆபாசமாக திட்டி தாக்க முயன்றனர்.
இது  பொதுமக்கள், போதை ஆசாமிகள் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அதனை அறிந்து சுதாரித்த போலீசார் சுற்றுலா பயணிகளான போதை ஆசாமிகளை போராடி  போலீஸ் வாகனத்தில் ஏற்றி  ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.
இதனால்  மோதல் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக சுற்றுலா பயணிகள் எட்டு பேர் மீது பொது இடத்தில் மோதல் ஏற்படும் சூழலை உருவாக்கியதாக வழக்கு பதிவு செய்த போலீசார் அனைவரையும் ஜாமீனில் விட்டனர்.

