/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வனப்பகுதியில் இறந்து 80 நாட்கள் ஆன மனித எலும்பு கூடு சேகரிப்பு கம்பம் போலீசார் விசாரணை

ADDED : ஜன 17, 2025 05:41 AM
கம்பம்: கம்பமெட்டு வனப்பகுதியில் இறந்து 80 நாட்கள் ஆன மனித எலும்பு கூடு சேகரித்து கம்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழக -கேரள எல்லையில் குமுளியில் ஆரம்பித்து கம்பமெட்டு, போடி மெட்டு வரை சுமார் 100 கி.மீ. தூரத்திற்கு வனப்பகுதிகள் உள்ளன.
இதில் தமிழக பகுதி வனப்பகுதியாகவும், கேரளா குடியிருப்பு பகுதிகளாகவும் உள்ளன. இதனால் கேரளாவை சேர்ந்தவர்கள் எளிதாக தமிழக வனப்பகுதிக்குள் நுழைந்து குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
நேற்று முன்தினம் கம்பம் மேற்கு வனச்சரகத்தை சேர்ந்த வனக் காப்பாளர் மணிவண்ணன், வனக்காவலர் பாண்டி ஆகியோர் கம்ப மெட்டிலிருந்து நெடுங்கண்டம் செல்லும் ரோடு கிழக்கு பக்கம் உள்ள வனப்பகுதிக்குள் ரோந்து சென்றனர். அப்போது மரத்தடியில் ரெயின்கோட் அணிந்த ஆணா, பெண்ணா என கண்டுபிடிக்க முடியாத அளவில் எலும்பு கூடு ஒன்று கிடந்தது .
கம்பம் வடக்கு எஸ்.ஜ நாகராஜ் தலைமையிலான போலீசார், எலும்பு கூடுகளை சேகரித்து, தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பினர். இறந்தது ஆண் என்றும், இறந்து 80 நாட்களாகி இருக்கலாம் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கம்பமெட்டு , நெடுங்கண்டம், கட்டப்பனை, குமுளி போலீஸ் ஸ்டேசன்களில் காணவில்லை என பதிவான எப்.ஐ.ஆர்., விபரங்களை - சேகரித்து கம்பம் போலீசார் விசாரிக்கின்றனர்.