புகையிலை பதுக்கிய முதியவர் கைது
தேனி: கடமலைக்குண்டு முனியாண்டி கோயில் தெரு சங்கரபாண்டி 71. இவரது பெட்டிக்கடையில் அனுமதியின்றி 90 கிராம் எடையுள்ள 6 புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்தார். கடமலைக்குண்டு போலீசார் கைது செய்து, புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
டூவீலர்கள் விபத்து: மூவர் காயம்
தேனி: மேல்மங்கலம் மேலத்தெரு மருதராஜேஷ் 19. மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவன கலெக்ஷன் ஊழியராக போடி ரெங்கநாதபுரத்தில் தங்கி பணிபுரிந்தார். செப்., 17 ல் டூவீலரில் தேனி சென்று பணியை முடித்துவிட்டு போடி நோக்கி ஹெல்மெட் அணிந்து சென்றார். அப்போது பின்புறமாக வந்த போடி புதுார் குட்டித் தேவர் சிலை தெரு ரூபன் 20, ஓட்டி வந்த டூவீலர் பின்புறமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மருதராஜேஷ் காயம் ஏற்பட்டது. ரூபன், அவரது பின்னால் அமர்ந்து வந்த போடி தேரடித் தெரு நாகராஜ் ஆகியோர் காயம் அடைந்தனர். மூவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நாகராஜ் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாகராஜ் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
டூவீலர் திருட்டு
தேனி: கோடாங்கிபட்டி பொன்ராஜபிள்ளைத் தெரு கண்ணன் 40. இவர் செப்.11ல் தனது வீட்டின் முன் ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள டூவீலரை இரவு நிறுத்திவிட்டு, மறுநாள் காலையில் பார்க்கும் போது காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மாணவி மாயம்
தேனி: பூதிப்புரம் கோட்டைமேட்டுத்தெரு ஹைஸ்கூல் தெரு சடேஷ்வரன் 47. இவரது மகள் சுபா 14. இவர் பூதிப்புரம் அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர், மீண்டும் வீடு திரும்ப வில்லை. தந்தை புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.