லாட்டரி விற்றவர் கைது
தேனி: கம்பம் தெற்கு போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., ஜமீன்தார் தலைமையிலான போலீசார் கம்பம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தெருவில் மறவர் மக்கள் மன்றம் முன் ரோந்து சென்றனர். அப்போது கம்பம் சுப்ரமணியர் கோயில் தெரு முகமதுரபீக் 51, ரூ.8500 மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரிகள் விற்பனைக்காக வைத்திருந்தார். அவரை போலீசார் கைது செய்து, லாட்டரி சீட்டுக்களை கைப்பற்றினர்.
மளிகைக் கடையில் திருட்டு
தேனி: சின்னமனுார் மின் நகர் பாஸ்கரன் 52. இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல் அக்., 7 இரவில் கடையை அடைத்துவிட்டு, மறுநாள் கடையை திறந்த போது கடையின் பூட்டை உடைத்து கடைக்குள் இருந்த எண்ணெய் பேஸ்ட், நெய் மசலாப் பொருட்கள் என ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள், ரொக்கப்பணம் 8500 என மொத்தம் ரூ.43,500 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. பாஸ்கரன் புகாரில் சின்னமனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.