ADDED : அக் 13, 2024 05:28 AM
கார்மோதியதில்
பழவியாபாரி காயம்தேனி: அல்லிநகரம் வள்ளிநகர் மணிகண்டன் 34 , பழவியாபாரி. இவர் தேனி பெரியகுளம் ரோட்டில் பழைய ஜி.எச்., செல்லும் ரோடு அருகே ரோட்டை கடந்தார். அப்போது பழைய ஜி.எச்., ரோடு சதீஸ்குமார் 52, ஓட்டிவந்த கார் மணிகண்டன் மீது மோதியது. காயமடைந்த மணிகண்டனுக்கு தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா வைத்திருந்த
இருவர் கைதுதேனி: வீரபாண்டி எஸ்.ஐ., அசோக் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கோட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நின்றிருந்த அதேபகுதியை சேர்ந்த பூமிநாதன் 21, ஹரிஸ்குமாரை விசாரித்த போது அவர்களிடமிருந்து ரூ.180 மதிப்புள்ள 6 கிராம் கஞ்சாவை கைப்பறினர். இருவரையும் கைது செய்தனர்.
பெயிண்டால் எழுதியவர் மீது வழக்குதேனி: கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில் கட்சியின் பெயர், தலைவர்கள் பெயரை பெயிண்டால் எழுதிவைத்திய தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி நகரதலைவர் பாலு மீது தேனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.