ADDED : அக் 18, 2024 05:50 AM
மது பதுக்கியவர் கைது
தேனி : கோம்பை எஸ்.ஐ., சரஸ்வதி தலைமையிலான போலீசார் ராணிமங்கம்மாள் சாலை பானைக்குழாய் அருகே ரோந்து சென்றனர். அப்போது பி.ரெங்கநாதபுரம் காந்திஜி தெரு முருகன் 62, அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக 10 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
பெண் தற்கொலை
தேனி : வீரபாண்டி லட்சுமிபுரம் நடுத்தெரு கேபிள் டி.வி., ஆப்ரேட்டர் செல்லப்பாண்டியன் மனைவி ஈஸ்வரி 38. இத்தம்பதிக்கு அனுமித்தா, ராகவஸ்ரீ என 2 மகள்கள் உள்ளனர். ஈஸ்வரி வயிற்றுவலி அதிகரித்து மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து து வந்துள்ளார். நேற்று முன்தினம் விஷம் குடித்து மயங்கினார். தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சைஅங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
மது விற்ற பெண் கைது
தேனி : உத்தமபாளையம் எஸ்.ஐ., இளங்கோவன் தலைமையிலான போலீசார் கலிமேட்டுப்பட்டியில் ரோந்து சென்றனர். அப்போது அதேப்பகுதி நடராஜன் மனைவி பவுணம்மாளின் 54, பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட ரூ.2164 ரூபாய் மதிப்புள்ள புகையிலைப் பாக்கெட்டுகளை பதுக்கி விற்பனை செய்தனர். பவுணம்மாளை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.