ராணுவவீரரின் மனைவி மாயம்
தேனி: கோட்டூர் என்.சி.,காலனி ராணுவவீரர் கருத்தப்பாண்டி 30. இவரது மனைவி ஜீவிதா 21. மூன்றாண்டுகளுக்கு திருமணம் முடிந்து 5 வயது மகன் உள்ளார். அக்.27 ல் விடுமுறையில் வந்தவர் தனது குடும்பத்தினருடன் இருந்தார். அப்போது மனைவி ஜீவிதா அதிகநேரம் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். இதனை கணவர் கண்டித்தார். இதனால் நவ.19ல் காலை ஜீவிதா கடைக்கு சென்று வருவதாக கணவரிடம் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்ப வில்லை. ராணுவவீரர் வீரபாண்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
கூலித்தொழிலாளி மாயம்
தேனி: தர்மாபுரி மேற்குத்தெரு மாரியப்பன் 50. இவரது மனைவி பூங்கொடி 50. கணவர் மது குடித்து மனைவியை தாக்கினார். இப் பிரச்னையில் கோபித்துக் கொண்டு 2 ஆண்டுகளுக்கு முன் பூங்கொடி பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதன் பின் மாரியப்பன், 2023 ஜன.,9ல் தர்மாபுரி மேற்குத்தெருவில் உள்ள மாமனார் வீட்டிற்குசென்று மனைவியை அழைத்தார். பின் வெளியே சென்று விட்டார். அதன் பின் கணவர் குறித்து தகவல் தெரியவில்லை. இதனால் மனைவி புகாரில் வீரபாண்டி போலீசார் மாரியப்பனை தேடி வருகின்றனர்.