தற்கொலை
தேனி: பூமலைக்குண்டு தெற்கு தெரு கார்த்திக் 39, கட்டட கான்ட்ராக்டர். தொழில் செய்வதற்காக பலரிடம் கடன் வாங்கி இருந்தார். கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்தார். இந்நிலையில் வேலைக்கு செல்வதாக கூறி சென்றனர் விஷம் குடித்தார். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நுழைவாயிலில் மயக்கிய நிலையில் கிடந்தவரை, சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மனைவி பூங்கொடி புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மீன்பிடிக்க சென்றவர் பலி
தேனி: தேனி பாரஸ்ட்ரோடு கணேசன் 68. உடல்நிலம் பாதிக்கப்பட்டு மாத்திரை சாப்பிட்டு வந்தார். ஆற்றில் மீன்பிடிக்க செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் டிச.,26ல் மீன்பிடிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அவரது உடல் முகம் அழுகிய நிலையில் கொட்டக்குடி ஆறு, முல்லை பெரியாறு கலக்கும் இடத்தில் கிடந்தது. மனைவி நாகஜோதி புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
பாதயாத்திரை பக்தர் காயம்
தேனி: போடி ராசிங்காபுரம் நடுத்தெரு விஜயா 55. இவர் பழனிக்கு பாதையாத்திரை சென்றார். கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி முருகன் கோவில் அருகில் நடந்த சென்ற போது உப்பார்பட்டி எம்.எஸ்.பி., நகர் போத்திராஜ் ஓட்டிசென்ற டூவீலர் விஜயா மீது மோதியது. காயமடைந்த விஜயா அரசு மருத்துக்கல்லுாரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விவசாரிக்கின்றனர்.
கஞ்சா வைத்திருந்தவர் கைது
தேனி: தேனி மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசார் கோடாங்கிபட்டி முத்துநகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக அதே பகுதியை சேர்ந்த பார்த்திபனை சோதனை செய்தனர். அவரிடம் ரூ. 3ஆயிரம் மதிப்பிலான 150 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் கோடங்கிபட்டியை சேர்ந்த பிரகாஷ், சிவா ஆகியோரிடம் கஞ்சா வாங்கி விற்பனைக்கு வைத்திருந்ததாக தெரிவித்தார். மூவர் மீது வழக்கு பதிந்து, பார்த்திபனை போலீசார் கைது செய்தனர்.

