வழிப்பறி முயற்சியில் மூவர் கைது
தேனி: ஆண்டிபட்டி பொன்னம்படுகை பாண்டியன். பால் வியாபாரம் செய்து வருகிறார். பல கிராம்ங்களில் பால் சேகரித்து அதனை வயல்பட்டி உள்ள பால் குளிரூட்டும் பண்ணைக்கு அனுப்பி வைப்பது வழக்கம். அதன்படி ஜன.,2ல் சேகரித்த பாலை நான்கு சக்கர வாகனத்தில் அனுப்பி வைத்தார். வண்டியை அதே ஊரைச்சேர்ந்த செல்லப்பாண்டி ஓட்டினார். தங்கப்பாண்டி உடனிருந்தார். வண்டி தாடிசேரியில் கரட்டுப்பாதையில் வந்த போது, டூவீலரில் வந்த வீரபாண்டி தெற்கு தெரு சுபாஷ்குமார் 22,கிழக்கு தெரு பரத் 19, வெண்ணிலா நகர் அருண்குமார் 21 இணைந்து மறித்தனர். தொடர்ந்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தன். பாண்டியன் புகாரில் வீரபாண்டி போலீசார் பரத், சுபாஷ்குமார், அருண்குமாரை கைது செய்தனர்.
தாய், சகோதரனை தாக்கியவர் கைது
தேனி: தேனி பழைய ஜி.எச்.தெரு கலைச்செல்வி 42. இவருக்கு ஞானபிரகாஷ், பிரவீன்குமார் என இரு மகன்கள் உள்ளனர். ஞானபிரகாஷ் மது குடித்து பிரச்னை செய்து வந்தார். குடிக்க பணம் கேட்டு வீட்டில் பிரச்னை செய்தார். தொடர்ந்து கம்பால் தாய் கலைச்செல்வியை தாக்கினார். பிரவீன்குமாரை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தார். கலைசெல்வி புகாரில் ஞானபிரகாஷை தேனி போலீசார் கைது செய்தனர்.

