அரசு ஊழியர் இறப்பு
போடி : போடி அருகே ராசிங்காபுரம் மணிகண்டன் 52. இவர் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அரசு போக்குவரத்துக கழக டெப்போவில் மெக்கானிக் வேலை பார்த்து வந்தார். வலிப்பு நோய் காரணமாக மதுவிற்கு அடிமையாகி ஓராண்டாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மனைவி ஜெயலட்சுமி, உறவினரும் கண்டித்தனர். இதனால் கோபித்துக் கொண்டு கேரளாவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று அங்கு தங்கி 6 மாதமாக கூலி வேலை செய்துள்ளார். நேற்று முன்தினம் ராசிங்காபுரம் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். மனைவி ஜெயலட்சுமி புகாரில் போடி தாலுாகா போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் தற்கொலை
போடி: சில்லமரத்துப்பட்டி எம்.ஜி.ஆர்., தெருவை சேர்ந்தவர் சின்ராஜ் 48. கொத்தனார். இவரது மனைவி மீனா 41. கட்டட தொழிலாளி. இவருக்கு வயிற்று வலி இருந்துள்ளது. 2 நாட்களுக்கு முன் வலி தாங்க முடியாமல் விஷம் குடித்துள்ளார். தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு நேற்று இறந்தார். போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
முதியவர் தற்கொலை
தேனி: குச்சனுார் துரைசாமிபுரம் மாடசாமி கோயில் தெரு முத்துப்பாண்டி 23. இவரது முதல் தந்தை முத்துவீரன் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இதனால் தாய் மாரியம்மாள், 2வது தந்தை கருப்பசாமியை 65. மறுமணம்செய்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கருப்பசாமிக்கு சிலமாதங்களுக்கு முன் கண்கள் தெரியவில்லை. கண்ணில் அறுவை சிகிச்சை செய்தார். வலி அதிகமாகவும், கண்கள் தெரியாமல் அவதியுற்ற கருப்பசாமி, மிகுந்த மனவேதனையில் விஷம் குடித்தார். தேனி மருத்துவக் கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.சின்னமனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுபாட்டில்கள்
பதுக்கிய நால்வர் கைது
தேனி: வீரபாண்டி எஸ்.ஐ., உப்புக்கோட்டை பகுதியில் ரோந்து சென்றார். மேற்குத் தெரு குமார் 45, விற்பனைக்காக 5 மதுபாட்டில்களை வைத்திருந்தார். அவரை கைது செய்தனர். பழனிசெட்டிபட்டி போலீசார் பாலகிருஷ்ணாபுரம் விலக்கு, வீரபாண்டி ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது காட்டுநாயக்கன்பட்டி கிழக்குத் தெரு பெருமாள் 44, ரூ.16,500 மதிப்புள்ள 110 மதுபாட்டில்களை பதுக்கிவைத்திருந்தார். பாலகிருஷ்ணாபுரம் விலக்கில் அய்யனார்புரம் சிகாமணி 50, ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள 40 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார்.
பழனிசெட்டிபட்டி அண்ணாநகர் முதல் தெரு ஜெயராமன் 29, பெட்டிக்கடையில் சோதனையிட்ட போது 16 மதுபாட்டில்கள், மதுவிற்ற பணம் ரூ.3 ஆயிரம் இருந்தது. மூவரையும் கைது செய்த போலீசார் 166 மதுபாட்டில்கள், ரூ.3 ஆயிரம் பணத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

