கொலை மிரட்டல் : மூவர் மீது வழக்கு
தேவாரம்: நாடார் தெரு மணிக்குமார் 38. இவரிடம் இதே பகுதியைச் சேர்ந்த நாட்ராயன் கடனாக பணம் வாங்கினார். கொடுத்த பணத்தை மணிக்குமார் நாட்ராயனிடம் திரும்ப கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் நாட்ராயன் தான் வைத்திருந்த, கத்தியால் மணிக்குமாரை குத்தினார். உடன் வந்த லோகேஷ், என்.லோகேஷ் இருவரும் சேர்ந்து மணிக்குமாரை தாக்கி, காயம் ஏற்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர். மணிக்குமார் புகாரில் தேவாரம் போலீசார் நாட்ராயன், லோகேஷ் உட்பட மூவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
ஆட்டோ டிரைவர் மீது போக்சோ வழக்கு
போடி: மீனாட்சிபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரகாஷ் 36. இவர் 13 வயது பள்ளி மாணவியை பாலியல் தொந்தரவு செய்தார். போடி அனைத்து மகளிர் போலீசார் பிரகாஷ் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.
புகையிலை பதுக்கியவர் கைது
போடி: மீனாட்சிபுரம் பட்டாளம்மன் கோயில் தெரு முகமது ரபிக் 58. இவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக பெட்டிக் கடையில் பதுக்கி வைத்திருந்தார். போடி தாலுகா போலீசார் முகமது ரபிக்கை கைது செய்து, அவரிடம் இருந்த 10 புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றினர்.
கொலை மிரட்டல் : ஒருவர் கைது, ஐவர் மீது வழக்கு
தேவாரம்: மல்லிங்காபுரம் கார்த்திக் 31. தனியார் பண்ணை மேலாளர். டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்த கோபால், பாண்டி, அழகுமலை, நடராஜ், டி.செல்லாயிபுரம் செல்வம், வடிவேல் ஆகிய 6 பேரும் சேர்ந்து பண்ணையில் அமைக்கப்பட்டு இருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான சோலார் மின்வேலியை சேதப்படுத்தினர். பின் ரூ. 52 ஆயிரம் மதிப்பு உள்ள மருந்து தெளிக்கும் ஸ்பிரேயர், ஓஸ்களை திருடி சென்றனர். இதுகுறித்து கார்த்திக் கேட்ட போது, 'நாங்கள் தான் திருடினோம், மீறி கேட்டால் வெட்டி கொலை செய்து விடுவோம்' என, மிரட்டி உள்ளனர். பாதிக்கப்பட்ட கார்த்திக் புகாரில் தேவாரம் போலீசார் கோபாலை கைது செய்தனர். பாண்டி, அழகுமலை உட்பட 5 பேர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.