ADDED : ஜூலை 16, 2025 07:08 AM
தவறி விழுந்த ரூ.46,020 மாயம்
தேனி: தேனி சமதர்மபுரம் மகாலிங்கம் 73. கடந்த ஜூன் 30ல் தனது காரில் உறவினர் ஒருவரை இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தேர்வு எழுத மதுரைக்கு அழைத்து சென்றார். காரில் நண்பருடன் செல்ல காத்திருந்தார். நண்பர் வந்தவுடன் காரில் இருந்து இறங்கி, பேசிக்கொண்டிருந்த போது மகாலிங்கம் தனது கர்சிப்பில் கட்டி வைத்திருந்த பணம் ரூ.46,020 கீழே விழுந்து விட்டது. அதை கவனிக்காத முதியவர், காரில் ஏறி மதுரைக்கு புறப்பட்டார். மதுரை மெயின் ரோடு சென்றவுடன், காரில் பணத்தை தேடிய போது காணவில்லை. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கார் மோதி இருவர் காயம்
தேனி: சின்னஓவுலாபுரம் காமராஜபுரம் வடக்குத்தெரு மதன்குமார் 26. இளநீர் வெட்டும் தொழிலாளி. இவரது அத்தை மகன் சாமிநாதன் டூவீலரை ஓட்ட,இவர் பின்னால் அமர்ந்து குமுளி - திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில் வீரபாண்டியில் இருந்த தேனி நோக்கி வந்தனர். தனியார் மில் அருகே திருப்பினர். அப்போது தேனியில் இருந்து கம்பம் நோக்கிச் சென்ற மதுரை மாவட்டம், பேரையூர் தாடயம்பட்டியை சேர்ந்த நாகராஜ் 47, ஓட்டிவந்த கார் டூவீலர் மீது மோதி விபத்து நடந்தது. இதில் மதன்குமார், சாமிநாதன் காயம் அடைந்தனர். வீரபாண்டி போலீசார் இருவரையும் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.