ஐயப்ப பக்தர் விபத்தில் காயம்
தேனி: திண்டுககல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கஸ்துாரி நகர் அய்யம்பெருமாள் 48. இவரும், இவரது நண்பர்கள் 10 பேர் இணைந்து மாலை அணிந்து பாதயாத்திரையாக சபரிமலை செல்கின்றனர். இவர்கள் குமுளி முதல் திண்டுக்கல் மெயின் ரோட்டில் வீரபாண்டி கருப்பசாமி கோயில் அருகே சென்றனர்.
அப்போது வீரபாண்டி பெரியதெரு முருகன் 52, ஓட்டிவந்த டூவீலர், மாலை அணிந்த அய்யம்பெருமாள் மீது மோதி விபத்து நடந்தது. இதில் இருவரும் காயமடைந்தனர். வீரபாண்டி போலீசார் விசாரிக்கிறார்.
மது பாட்டில் பதுக்கல்: இருவர் கைது
தேனி: கூடலுார் பேச்சியம்மன் கோயில் தெரு ராஜேந்திரன் 60. இவர் தனது பெட்டிக்கடையில் அனுமதி இன்றி 10 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தார். ஆண்டிபட்டி மெயின்ரோடு முருகன் 52. இவர் அங்குள்ள சுடுகாட்டு ரோட்டில் உள்ள முட்புதரில் 32 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கினார். இருவரையும் ஆண்டிபட்டி, கூடலுார் வடக்கு போலீசார் கைது செய்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கம்பத்தில் மறியல்: 16 பேர் கைது
தேனி: தமிழ்தேசிய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் தலைவர் ராஜ்குமார் 34, தலைமையில் நேற்று கம்பம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் மஹாலில் நடந்த ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பி மறியலில் ஈடுபட்டனர். கம்பம் வடக்கு போலீசார் 16 பேரையும் கைது செய்தனர்.