4 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைது
தேனி: மதுவிலக்கு அமலாக்கத்துறை இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி, எஸ்.ஐ., சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார் கோட்டூர் - தர்மாபுரி ரோட்டில் ரோந்து சென்றனர். வருஷநாடு சிங்கராஜபுரம் விநாயகர் கோயில் அருகே வசிக்கும் சத்ரியன் 23, டூவீலரில் 2 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கடத்தினார். அவரை கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்படி உத்தமபாளையம் கோகிலாபுரம் குளத்துக்கரைப் பகுதியை சேர்ந்த அபிமன்யு 28, இரண்டு கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தார். இருவரையும் கைது செய்து கஞ்சா, டூவீலரை பறிமுதல் செய்தனர்.
தொழிலாளி தற்கொலை
தேனி: தேவதானப்பட்டி தெற்குத் தெரு செல்வம் 45. தாராபுரம் சொங்கநாதபாளையம் கவிதா 43. இருவருக்கும் திருமணம் முடித்து மகள் பிரியங்கா, மகன் எழிலரசன் உள்ளனர். இந்நிலையில் குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டத்தில் வசித்த நிலையில், கணவன் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன்பின் செல்வம் தேவதானப்பட்டியில் வசித்தார். இந்நிலையில் தேவதானப்பட்டி பிரிவு அருகே உள்ள பேக்கரி கடை பின்புறம் உள்ள மா மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.