மாணவிக்கு இடையூறு: இளைஞர் மீது வழக்கு
தேனி: அல்லிநகரம் 19 வயது கல்லுாரி மாணவி. பெரியகுளத்தில் உள்ள கல்லுாரியில் படித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து 20, மாணவி கல்லுாரி செல்லும் போது பின் தொடர்ந்து சென்று, கிண்டல் கேலி செய்து வந்தார். தவறான நோக்கத்தில் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
தற்கொலை
தேனி: பழனிசெட்டிபட்டி ஆர்.எம்.டி.சி., காலனி லட்சுமி 50, இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சை எடுத்தும் நோய் குணமாக வில்லை. இதனால் விரக்தி அடைந்தார். பின் வீட்டில் இருந்தவர் விஷம் குடித்தார். அவரை தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி இறந்தார்.
விபத்தில் ஒருவர் பலி
தேனி: தேவதானப்பட்டி துலுக்கபட்டி ஷேக்பாவித் 65. இவர் திண்டுக்கல் குமுளி ரோட்டில் தேனி பைபாஸ் வழியாக டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) போடி சென்றார். ஆதிப்பட்டி ரயில்வே மேம்பாலம் அருகே செல்லும் போது ரோட்டின் ஓரத்தில் நடந்து சென்ற பெண் மீது டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டூவீலரில் இருந்து கீழே விழுந்த ஷேக்பாவித் சம்பவ இடத்திலேயே இறந்தார்.